TNPSC Group 4 General Science Notes

TNPSC Group 4 General Science Notes

TNPSC Group 4 General Science Notes

இயற்பியல் அளவுகள்:-

அளவிடக்கூடிய அளவுகளை இயற்பியல் அளவுகள் என்கிறோம். இயற்பியல் அளவுகளை இரண்டாக வகைப்படுத்தலாம். அவை அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் ஆகும். எந்த ஒரு அழகினாலும் குறிப்பிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம்.

எடுத்துக்காட்டு- நீளம், நிறை, காலம், வெப்பநிலை.

வேறு அளவுகளால் குறிப்பிடக்கூடிய அளவுகள் வழி அளவுகள் எனப்படும்.

எடுத்துக்காட்டு- பரப்பளவு கன அளவு மற்றும் அடர்த்தி போன்றவை.

இயற்பியல் அளவுகளுக்கு எண்மதிப்பு, அளவிடும் அலகு உண்டு. ஒரு சில அலகு பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

TNPSC Group 4 General Science Notes

வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவி:-(TNPSC GROUP 4 GENERAL SCIENCE NOTES)

நமது அன்றாட வாழ்வில் பொருட்களின் நீளம் அளக்க நாம் மீட்டர் அளவுகளை பயன்படுத்துகிறோம். அவை சென்டி மீட்டர் அளவிலும் மில்லிமீட்டர் அளவிலும் குறிக்கப்பட்டிருக்கும். ஒரு மீட்டர் அளவு கோலினால் அளக்க முடிந்த மிகச் சிறிய அளவு அதன் மீச்சிற்றளவு எனப்படும்.

ஒரு மீட்டர் அளவியின் மீச்சிற்றளவு ஆனதே ஒரு மில்லி மீட்டர் ஆகும். இதனைப் பயன்படுத்தி பொருட்களின் நீளம் போன்றவற்றை மில்லி மீட்டர் அளவுக்கு துல்லியமாக கணக்கிடலாம். ஆனால் சிறிய மற்றும் வட்டவடிவ பொருட்களை இந்த அளவியின் மூலம் அளக்க முடியாது. எனவே வெர்னியர் அளவி மற்றும் திருகு அளவி ஆகியன பயன்படுத்தப்படுகின்றன.

1. வெர்னியர் அளவி:-

கிரிக்கெட் பந்து, கோலி குண்டு போன்ற கோள வடிவம் கொண்ட பொருட்கள் மற்றும் தேநீர் குடுவை, பேனா மூடி போன்ற உள்ளீடற்ற பொருட்களின் விட்டம் ஆகியவற்றை மீட்டர் அளவியின் மூலம் துல்லியமாக அளக்க இயலாது. அதற்கு பொருட்களின் உள் விட்டம் மற்றும் வெளி விட்டத்தை அளக்க உதவும் கருவியான வெர்னியர் அளவியை பயன்படுத்தலாம்.

2. திருகு அளவி:-

வெர்னியர் அளவியை பயன்படுத்தி சென்டிமீட்டர் அளவில் தான் அளக்க முடியும். அதைவிடக் குறைவான நீளம் அல்லது தடிமனை அளக்க திருகு அளவி ஆனது பயன்படுகிறது. இது மிகக் குறைந்த அளவுகளை, ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக அளவிடும் கருவியாகும். இக்கருவியை கொண்டு மெல்லிய கம்பியின் விட்டம், மெல்லிய உலோக தட்டின் தடிமன் போன்றவற்றை அளவிடலாம்.

SI அலகு முறை:-

SI அலகு முறை என்பது பண்டைய அலகு முறைகளை விட நவீனமயமான மற்றும் மேம்படுத்தப்பட்ட அலகு முறையாகும்.ஏறக்குறைய உலகில் உள்ள அணைத்து நாடுகளிலும் இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது சில அடிப்படையான அலகுகளை கொண்டது.அந்த அடிப்படை அலகுகளில் இருந்த பெருக்கல் மற்றும் வகுத்தல் மூலம் பிற வழி அலகுகளை பெற முடியும்.SI அலகு முறையில் ஏழு அடிப்படை அலகுகள் உள்ளன.அவை அடிமான அலகுகள் என்றும் வழங்கப்படுகின்றன.

FOLLOW OUR YOUTUBE CHANNEL

GET MORE NOTES CLICK HERE

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here