TNPSC Group 2 Exam Preparation In Tamil

TNPSC Group 2 Exam Preparation In Tamil:-

எனது அன்பான மாணவ மாணவியர்களுக்கு வணக்கம்! அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தக்கூடிய டிஎன்பிசி குரூப் 2 தேர்வுக்கு நீங்கள் எப்படி தயாராவது? என்ன படித்தால் வெற்றி சாத்தியமாகும்? எப்படி படிப்பது உள்ளிட்ட பல வகையான தகவல்களை நாம் பார்க்க போகிறோம்.

TNPSC Group 2 Exam Preparation In Tamil

பொதுவாக அரசு வேலை என்பது அனைவரின் கனவாகவே உள்ளது. அதை நனவாக்க வேண்டுமென்றால் அதற்கான முயற்சியும் பயிற்சியும் அவசியமாகும். ஒரு பட்டதாரி குரூப்-2 தேர்வை எதிர் கொள்ள வேண்டுமென்றால் கல்வித்தகுதி மட்டும் போதுமானது அல்ல. சில முக்கிய தகுதிகள் அந்த மாணவனுக்கு வேண்டும்

1. தன்னம்பிக்கை

2. விடாமுயற்சி

3. மன வலிமை மற்றும் தைரியம்

மேற்கண்ட மூன்றும் இருந்தாலே ஒரு மாணவனால் எளிமையாக இந்த தேர்வை எதிர் கொண்டு வெற்றி பெற முடியும்.

அவர்கள் என்ன செய்கிறார்கள் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்து நேரத்தை வீணாக்காமல் தன்னை கொஞ்சம் தயார் படுத்திக் கொள்ளுங்கள். இந்த உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது அதனுடன் நீங்களும் சேர்ந்து ஓடுங்கள்.

முதலில் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் எழும் என்னால் இந்த குரூப் 2 தேர்வை எதிர்கொள்ள முடியுமா? வெற்றி கிடைக்குமா? அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்ற பல கேள்விகள் எழும்.

இதற்கு சில வழிகள் உண்டு. ஒரு வீட்டைக் கட்டும் பொழுது அதற்கு சரியான அடிப்படை இருந்தால் அந்த வீடு வலிமையாக இருக்கும். அதேபோன்றுதான் இந்த தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் நான் பள்ளி பருவத்தில் படித்த அடிப்படையான கேள்விகள் அதனால் அடிப்படையில் முதலில் நாம் அடிமையாக வேண்டும்.

நீங்கள் எந்த துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் சரி, பள்ளி புத்தகங்களை கண்டிப்பாக படித்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். தனது கல்லூரியில் சரியாக படிக்காத அவர் கூட இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

அதனால் நான் கல்லூரியிலேயே ஒழுங்காக படிக்கவில்லை எப்படி அரசு வேலை கிடைக்கும் என்று மாணவர்கள் நினைக்க வேண்டாம். முயற்சி செய்தால் வெற்றி தொட்டுவிடலாம்.

படிக்கும் வழிமுறை:-

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி புத்தகங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில் முதலில் நீங்கள் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் மொத்தத்தையும் படித்து தன்னை குழப்பிக் கொள்வதை விட்டுவிட்டு ஒரு நாளைக்கு ஒரு தலைப்பு விதம் படித்தால் போதுமானது.

ஏதாவது ஒரு தலைப்பு உங்களுக்கு கடினமாக தெரிந்தால் அதை விட்டு விடலாம் என்று நினைக்காதீர்கள். பெரும்பாலும் எல்லாவற்றையும் படித்தே ஆக வேண்டும் என்று நினையுங்கள். அதுவே உங்களை வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லும்.

ஒரு தகவலை நீங்கள் தெரிந்து கொண்டால் அதனை உங்கள் நண்பர்களுடன் பரிமாறிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது அந்த தகவல் உங்கள் மனதில் நன்கு பதிந்து விடும்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2A என்ற இரண்டு தேர்வுகளும் தற்போது ஒன்றாக சேர்த்த நடத்தப்படுகிறது.

இதற்கான தேர்ந்தெடுக்கும் முறை மூன்று முறைகளில் நடத்தப்படுகிறது.

1. முதனிலைத் தேர்வு

2. முதன்மை தேர்வு

3. நேர்காணல்

முதல்நிலை தேர்வில் எடுக்கும் மதிப்பெண் உங்களின் வெற்றியை தீர்மானிக்காது. நீங்கள் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஒரு ஊன்றுகோலாக மட்டுமே அமையும். ஆனால் முதன்மை தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை உங்களின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதை மட்டும் மறவாதீர்கள். நேர்காணலும் மிக முக்கியம். அதில் 40 மதிப்பெண்கள் உள்ளன.

முடிந்தவரை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள பாடத்திட்டத்தின் அடிப்படையில்

தங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்த பதிவில் இதற்கான பாட திட்டம் என்ன எந்தெந்த வகையில் வினாக்கள் கேட்கப்படுகின்றன போன்ற அனைத்து தகவல்களையும் நாம் பார்க்கலாம்.

நமது யூடியூப் சேனலில் மாதிரி தேர்வுகள் இனிவரும் காலத்தில் நடத்தப்படும். அரசு தேர்வுக்கு தயாராக வரும் மாணவ மாணவியர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் புதிய புத்தகத்தின் அடிப்படையில் அனைத்து தேர்வுகளும் நமது சேனல் மூலம் இனி நடத்தப்படும்.

நமது இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு முன் நமது யூடியூப் சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்.

Get More TNPSC Exam Tips And Tricks Click Here Page

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here