Tnpsc Group 1 Preparations And Tips In Tamil

Tnpsc Group 1 Preparations And Tips In Tamil

Tnpsc Group 1 Preparations And Tips In Tamil

அனைவருக்கும் அரசு வேலை என்பது ஒரு கனவாக இருக்கும். அந்தக் கனவு நனவாக வேண்டுமானால் நாம் எடுக்கும் முயற்சி சரியானதாக இருந்தால் மட்டுமே போதும். ஒரு சிலருக்கு போலீஸ் வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். ஒரு சிலருக்கு தான் மிக உயர்ந்த பதவிகளில் சேர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதை கருத்திற்கொண்டு இன்றைக்கு நாம் பார்க்கப் போவது TNPSC GROUP 1 தேர்வுக்கு எப்படி நாம் தயாராவது எப்படி வெற்றி பெறுவது என்பதை பார்க்கப்போகிறோம்.

TNPSC நடத்தக்கூடிய GROUP 1 தேர்வில் உயர்ந்த பதவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக துணை ஆட்சியர்/ துணை கண்காணிப்பாளர்(DSP) போன்ற உயர்ந்த பதவிகள் உள்ளன.

பயிற்சி மையம் சென்றால் தான் வெற்றி பெற முடியுமா?(Tnpsc Group 1 Preparations And Tips In Tamil)

ஆரம்பத்தில் சொல்லிவிடுகிறேன் ஒருசிலர் பயிற்சி மையம் சென்றால் தான் வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்கள் ஆனால் குடும்பத்தின் வறுமை காரணமாக சிலரால் பயிற்சி மையத்திற்கு செல்ல இயலாது. பயிற்சி மையத்திற்கு செல்லாமலும் தனது முயற்சியாலும் பயிற்சியாலும் படித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம். மாணவர்கள் பயிற்சி மையத்திற்கு சென்றால் தான் வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள்.

என்னால் சாதிக்க முடியுமா?

ஒருசில மாணவர்கள் நாங்கள் பள்ளிப்பருவத்தில் நன்றாக படித்ததில்லை எங்களின் மதிப்பெண் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் மிகவும் குறைவு எங்களால் எப்படி இந்த தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று நினைக்கிறார்கள். முதலில் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நாம் GROUP 1 தேர்வு எழுத நமக்கு தேவையான தகுதி ஒரு பட்டதாரியாக இருக்க வேண்டும். பட்டதாரியாக உள்ள யார் வேண்டுமானாலும் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற தகுதி உடையவர்கள். தனது பள்ளிப்பருவத்தில் கல்லூரி பருவத்திலும் சுமாராக படித்த மாணவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுகிறார்கள். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டுமென்றால் UPSC போன்ற மிகக் கடினமான தேர்வுகளிலும் தனது கல்லூரியில் ARREAR வைத்த மாணவர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளார்கள்.

என்ன படிக்க வேண்டும்?

TNPSC வைக்கக்கூடிய எல்லா தேர்வுகளுக்கும் அடிப்படையானது நமது தமிழக அரசின் பள்ளி புத்தகங்களை ஆகும்.

TNPSC GROUP 1 தேர்வைப் பொருத்த வரை ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

இதில் தமிழ் பாடங்களை தவிர்த்து விட வேண்டும். ஏனென்றால் GROUP 2 மற்றும் GROUP 4 தேர்வுகளுக்கு மட்டுமே மொழிப்பாடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் TNPSC GROUP 1 தேர்வுக்கு பொது அறிவு பகுதி முக்கியமானது. கூடுதலாக நீங்கள் தினமும் வருகின்ற செய்தித்தாள்களை படிக்க வேண்டும். பள்ளி புத்தகங்களில் ஏராளமான நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் நமக்கு கொடுக்கப்பட்ட TNPSC GROUP 1 பாடத்திட்டத்தின்படி படிக்க வேண்டும்.

TNPSC GROUP 1 SYLLABUS DOWNLOAD HERE

மேலும் கூடுதலான சில தகவல்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம் தொடர்ந்து இணைந்திருங்கள் நமது இணைய தளத்துடன்!!!

Tamilnadu School Books buy Here

To All Government Jobs Visit Our Site Page Click Here

FOLLOW OUR YOUTUBE CHANNEL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here