Tnpsc Group 1 Preparations And Tips In Tamil

Tnpsc Exams Preparation In Tamil

Tnpsc Exams Preparation In Tamil

பொதுவாக நாம் எல்லோரும் TNPSC தேர்வுக்கு தயாராகிறோம். இருந்தாலும் ஏன் நம்மால் மட்டும் வெற்றி பெற முடியவில்லை அதில் இருக்கும் உண்மை என்ன? நாம் உண்மையில் நன்றாகத்தான் தயாராகிறோமா? என்ற சந்தேகம் உங்களுக்குள் எழும். அந்த அனைத்து வித கேள்விகளுக்கும் இந்த பதிவில் நிச்சயம் விடை கிடைக்கும். எப்படி முறையாக படிப்பது, அதனை எப்படி தேர்வில் வெளிப்படுத்துவது என்பதையெல்லாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஒரு தேர்வுக்கு எப்படி தயார் ஆவது படியெல்லாம் படித்தால் வெற்றிகிட்டும் போன்ற சில முக்கிய குறிப்புகளை நாம் பார்க்கலாம்.

1. ஸ்மார்ட்டாக படிக்கலாம்!

இப்போது எல்லோரிடமும் Mobile Phones உள்ளது. அதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படும்போது இணையதளம் மூலம் தீர்த்துக்கொண்டு எளிமையாக படிக்கலாம்.

2. சிலரிடம் பள்ளிப் புத்தகம் என்பது இருக்காது.TNPSC தேர்வுக்கு படிப்பவர்கள் நிச்சயம் பள்ளி புத்தகங்களை வைத்திருக்க வேண்டும். அப்படி புத்தகம் இல்லை என்றால் நமது அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொண்டு உங்கள் Mobile மூலம் படிக்கலாம் அல்லது அதனை டவுன்லோட் செய்து கொண்டு Printout எடுத்துக்கொண்டோம் படிக்கலாம்.

3. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 மணி நேரம் படித்தால் எளிமையாக வெற்றி பெறலாம்.

4. பொதுவாக எல்லோரும் காலையில் படிக்கும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

5.TNPSC தேர்வுக்கு நடப்பு நிகழ்வுகள் என்பது முக்கியமானது ஆகையால் காலையில் பெரும்பாலும் செய்தித்தாள் படிப்பது நல்லது.

6. மாலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யும் போது உங்களின் உள்ளமும் மனமும் தெளிவுபெறும்.

7. வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் அந்த வாரம் முழுவதும் படித்ததை தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.

8. பயிற்சி மையத்திற்கு செல்ல இயலாதவர்கள் தங்களுக்கென ஒரு கால அட்டவணையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி முறையாக படித்து வாரத்திற்கு ஒரு முறை தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.

9. முடிந்தவரை நீங்கள் படித்ததை மற்றவரிடம் சொல்லி பார்க்கும்போது நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் உங்கள் மனதில் ஆழமாக பதிந்து விடும்.

10.TNPSC தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பொதுவாக ஊர் நிகழ்ச்சிகள் மற்றும் சொந்தக்கார நிகழ்வுகள் போன்ற எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதை தவிர்க்கவும். ஏனென்றால் சிலர் உங்களின் தன்னம்பிக்கையை குறைக்க செய்வார்கள்.

பாட திட்டம் மிகவும் முக்கியம்(Tnpsc Exams Preparations In Tamil)

ஒரு சிலர் பாடத்திட்டம் என்ன என்பதையே தெரியாமல் வெறும் கடமைக்காக தேடி படிப்பார்கள். பாடத்திட்டத்தை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல் படிப்பதை வெற்றிக்கு வழி வகுக்கும்.

1. முதலில் பாடத்திட்டத்தை ஒரு பேப்பரில் எழுதி கொள்ள வேண்டும்.

2. அதில் உள்ள தலைப்புகளை எல்லாம் உங்களின் கால அட்டவணைப்படி வரிசை படுத்திக்கொண்டு தினமும் படிக்க வேண்டும்.

3. படித்து முடித்து விட்ட தலைப்புகளில் மேல் ஒரு மார்க் செய்ய வேண்டும்.

4. தலைப்பு வாரியாக வாரத்திற்கு ஒரு முறை தேர்வு எழுதி பார்க்க வேண்டும்.

5. முக்கியமாக முந்தைய வருட வினாத்தாள்களை நன்கு அலச வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான கேள்விகள் முந்தைய வினாத்தாளை சேர்ந்தவை.

Tnpsc Exams Preparation In Tamil

பாடத்திட்டத்திற்கு தகுந்தவாறு தன்னைத்தானே செதுக்கி கொள்ள வேண்டும். உங்களுக்கு வரும் சந்தேகங்களை அதே நேரத்தில் உடனே கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அறிவிப்பு வரும் வரை காத்திருக்காமல் படிக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு ஆரம்பிப்பதில் மிகவும் நல்லது அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.

TNPSC OFFICIAL SITE CLICK HERE

FOLLOW OUR YOUTUBE CHANNEL

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here